Female postal officer passes away Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள பைத்தந்துறை புதூர், கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் அஞ்சு(23) கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள பாலக்கொல்லை கிராம அஞ்சலக அலுவலராக பணி செய்து வந்துள்ளார். இவர் பணி நிமித்தம் காரணமாக அவர் சொந்த ஊரில் இருந்து வேலைக்குச் சென்று வருவதற்கு சிரமமாக இருந்ததால்உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள கணேசன் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியபடி தினந்தோறும் பாலக்கொல்லைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று காலை இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் அஞ்சு வீட்டு கதவை திறந்து பார்த்தபோது அந்த வீட்டுக்குள் அஞ்சு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்டுஅதிர்ச்சியடைந்தஅப்பகுதி மக்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்தசப் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் மற்றும் போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய அஞ்சுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் அஞ்சலகப் பெண் அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment