Female policeman  molested in moving bus; Retired soldier arrested

நீலகிரியில் பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோவையிலிருந்து உதகையை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் கோத்தகிரியைசேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தர்மன் என்பவர் பயணித்தார். அவருடைய முன் இருக்கையில் பெண் காவலர் ஒருவர் பயணித்துள்ளார். அப்பொழுது ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தர்மன் பெண் காவலர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர்தர்மனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது தர்மன் பெண் காவலரை தாக்கியுள்ளார்

Advertisment

இதனால் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்பொழுது வேறு ஒரு பேருந்தில் ஏறி தப்பிக்க தர்மன் முயன்றுள்ளார். ஆனால் பெண் காவலர் விடாமல் தர்மன் ஏறிய மற்றொரு பேருந்தில்ஏறியுள்ளார். உடனே சக போலீசாருக்கு பெண் காவலர் தகவல் அளித்தார். விரைந்து வந்தபோலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தர்மனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து பெண் காவலரை தாக்கியது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது, காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.