Advertisment

கார் மோதி விபத்து; பெண் காவல் உதவி ஆய்வாளர், காவலர் உயிரிழப்பு!

Female police sub inspector, female police officer passed away in car collision

மதுரை மாவட்டம் கூடல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(38) சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவர், திருவொற்றியூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அதே காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொசுவம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நித்தியா(35) என்பவரும் காவலராக பணிபுரிந்து வந்தார். விடுப்பில் இருந்த இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது அதிகாலை மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

இதில் நிகழ்விடத்திலேயே காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் காவலர் நித்தியாவை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதனை அடுத்து உதவி ஆய்வாளரின் உடலை உடற்குறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கும், பெண் காவலரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் மதன்குமார் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளரும், பெண் காவலர் உயிரிழந்த நிகழ்வு சக காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe