Advertisment

நான் வாழ்வதா? சாவதா? - வீடியோ வெளியிட்ட பெண் காவலர்

female police  released the video in distress

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கச்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும் இவருடைய தம்பிக்கும் ஏற்பட்ட நில பிரச்சினை சம்பந்தமாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது.

Advertisment

இந்த புகார் சம்பந்தமாக கந்திலி காவல் நிலையத்தில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மீண்டும் வெங்கடேசனுக்கும் அவருடைய தம்பிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

வெங்கடேசன் கந்திலி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மத்திய துணை காவல் படையில் (CISF) பணி புரியும் வெங்கடேசனின் மகள் பூங்கொடி தன்னுடைய தந்தைக்கு நேர்ந்த ஒரு தலைபட்சமான நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்து தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் வாழ்வதா சாவதா என்று கூட தெரியவில்லை என்றும் புலம்பி சீருடை உடன் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

police TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe