Advertisment

பெண் காவலர் தற்கொலை! 

Female police officer passed away

திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்தவர் ஆதிலெட்சுமி(56). இவர், திருச்சி திருவெறும்பூர், நவல்பட்டு பெண்கள் காவலர் பயிற்சி மையத்தில் வார்டனாக பணியாற்றி வந்தார். இவரின் கணவர் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. இவர்களுக்கு லெனின் (26), பரத் (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் பயிற்சி பள்ளியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் எஸ்ஐ ஆதிலெட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பெண் எஸ்.ஐ-ன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் எஸ்.ஐ தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe