female police officer lost her life

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரோஜா என்ற பெண் காவலர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ரோஜாவின் தாயார் திருவண்ணாமலையில் இருந்து தனது மகளைப் பார்க்க திருவள்ளூர் வந்துள்ளார். அப்போது, தனது இரண்டு குழந்தைகளையும் சரியாக கவனிக்க முடியவில்லை என்று கூறி தாயுடன் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெண் காவலர் ரோஜா காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவர் ராஜ்குமார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment