திருமணமான சில மாதங்களில் பெண் காவலர் தற்கொலை!

Female police lost their life  within a few months of marriage!

ராயபுரம் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு காவலராக பணியாற்றியவர் பிரியங்கா. 27 வயதான இவர், அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த 30 வயதான சேகர் என்பவரைக்காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த ஜனவரி மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, காவலர் தம்பதியர்.. ராயபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பிற்கு குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட காவலர் தம்பதியின் வாழ்க்கையில் அடிக்கடி குடும்ப விவகாரம் தொடர்பாகதகாறுஏற்பட்டுள்ளது. காவலர் சேகர்தினம்தோறும்மது அருந்திவிட்டு மனைவி பிரியங்காவிடம் சண்டையிட்டுவந்ததாகக்கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி மதியம் ஏற்பட்ட சண்டையில், கணவர் சேகர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் வரவேற்பறை மின்விசிறியில்.. பிரியங்கா தூக்கிட்ட நிலையில், சடலமாகக் கிடந்தாக கணவர் சேகர்போலீசாருக்குதகவல் கொடுத்தார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்தராயபுரம்போலீஸார்... பிரியங்காவின்உடலைகைப்பற்றி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவலர் தற்கொலை மரணம் குறித்து, விசாரணை நடத்தி வந்த நிலையில்.. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரியங்காவின் பெற்றோர்ராயபுரம்காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தனர். அதில், தனது மகளின் கணவன் சேகர், தினமும் குடித்துவிட்டு மகள் பிரியங்காவைஅவதூறாகப்பேசிவந்ததாகக்கூறியுள்ளனர். மேலும், மகள்இறந்ததாகக்கூறும் முந்தைய நாள் இரவு மகள் பிரியங்காஃபோன்செய்தபோது, ''கணவர் சேகர் குடித்துவிட்டு தகராறு செய்கிறார். அவர்என்னைக்கொடுமைப்படுத்துகிறார்.

நான் செத்தால்தான் விடிவு காலம் பிறக்கும்..' என்று அழுதுகொண்டே கூறியதாகப் புகாரில் பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். அப்போது, ஆறுதல் தெரிவித்து போனை வைத்ததாகவும், அதன் பிறகு செல்போனில், `எனக்கும் மாமாவுக்கும் ஒரு வாரமா சண்டை' என்று மெசேஜ் அனுப்பியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். ஆனால் எப்போதும் போல நடந்த சண்டை என்று பிரியங்காவின் பெற்றோர்கள் நினைத்திருக்க, கடந்த 31 ஆம் தேதி மதியம் முதலில் மருத்துவமனை மூலம் மகள் இறந்தத்தகவல் கிடைத்ததால் துடித்துப்போனோம் எனப் பெற்றோர்கள் கூறுகின்றனர். அந்தத்தகவலை கூட மகளின் கணவர் சேகர், சொல்லவில்லை என்பதால்,மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகாரில் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பிரியங்காவை தற்கொலைக்குத்தூண்டியதாக வழக்குப் பதிந்த போலீசார், கணவர் சேகரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே, உடற்கூறாய்வு முடிந்து பெண் காவலர் உடல் பெற்றோரிடம் அளிக்கப்பட்டது. இறந்த பிரியங்காவிற்கு திருமணமாகி சில மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ விசாரணைக்கும் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

ராயபுரம் பெண் காவலர் தற்கொலை வழக்கில் அவரின் கணவரான காவலர் சேகரை போலீஸார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

arrested police woman
இதையும் படியுங்கள்
Subscribe