/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_148.jpg)
காஞ்சிபுரம் மாநகராட்சி திருவீதி பகுதியை சேர்ந்தவர்கள் டிகேஸ்வரன்(44) - கிரிஜா(43) தம்பதியினர். டிகேஸ்வரன் சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஏட்டாகவும், கிரிஜா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்த தம்பதிக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக டிகேஸ்வரன் ஒரு நாய்யை தனது குழந்தை போல் நினைத்து வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் இரண்டு குட்டிகளை போட்ட நிலையில் அந்த இரண்டு குட்டிகளும் வீட்டின் உள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இதனால் ஆத்திரமைடந்த டிகேஸ்வரன் நாய் குட்டிகளைச் சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி மனைவி கிரிஜாவை திட்டியுள்ளார். இந்த நிலையில் கணவர் திட்டியதில் மன உளைச்சலுக்கு ஆளான கிரிஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)