
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டிஅரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே பொங்கல் விழா கொண்டாடி வந்த நிலையில், காவல்துறையினர் சார்பிலும் ஆங்காங்கே சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி அரசு மகளிர் கோஷா மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி, கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில்முதியோர்களுக்கு புத்தாடையும் அறுசுவை உணவும் வழங்கி பொங்கலை கொண்டாடினார்.

பொங்கலன்று ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும்,இதுபோல் அனைவரும் ஆதரவற்றோர்க்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனவும் ஆதரவற்றோர் காப்பாளர்கள் வேண்டுகோள் வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)