Female officer flexing paramedic on retirement day

விழுப்புரம் மாவட்டம், முதன்மை கல்வி அதிகாரியாக உள்ளவர் கிருஷ்ணபிரியா. இவரது கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் சக்கரபாணி. இவர், நீண்ட காலமாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். மிகவும் எளிமையான இவர், நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கான பாராட்டு விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது.

Advertisment

விழா முடிந்ததும் யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரியான தன்னை பல்வேறு இடங்களுக்கும் பணி நிமித்தமாக அரசு வாகனத்தில் டிரைவராக இருந்து அழைத்துச் சென்ற சக்கரபாணியை அதே வாகனத்தில் அதிகாரி அமரும் தனது இருக்கையில் சக்கரபாணியை அமர வைத்த கிருஷ்ணபிரியா, டிரைவர் இருக்கையில் தான் அமர்ந்து அந்த வாகனத்தை தானே ஓட்டிச் சென்று சக்கரபாணியின் வீட்டில் அவரை இறங்கச் செய்து அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமரவைத்து பாராட்டியுள்ளார்.

Advertisment

ஓய்வு பெறும் நாளில் தனக்கு அதிகாரியாக இருந்தவரே தன்னை காரில் அமர வைத்து காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டுச் சென்ற சம்பவம் ஓய்வுபெற்ற டிரைவர் சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.