/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4945.jpg)
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம் செல்லும் சாலையில் உள்ள பத்தலப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினரும் காவல்துறையினரும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர வனப்பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பேர்ணாம்பட்டு வனத்துறையினர் சிறுத்தை உயிரிழந்த பகுதி ஆந்திர வனப்பகுதி என்பதால் இது குறித்து ஆந்திர மாநில வனத்துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆந்திர மாநில வனத்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக சிறுத்தையைக் கொண்டு சென்றனர். இது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)