Advertisment

திருமாவளவனுடன் என் படத்தை இணைத்து ஆபாசமாக சித்தரிக்கிறார்கள் - பெண் வழக்கறிஞர் புகார்!

Female lawyer complaint about fake Social Media Post

Advertisment

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுடன் தனது புகைப்படத்தை இணைத்து திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பா.மணியம்மை என்பவர் இன்று (27-10-2020)சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வி.சி.கதலைவர் திருமாவளவனுடன் என் படத்தையும்,ஏராளமான பெண்களின் படங்களையும் இணைத்து, ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் திட்டமிட்டு சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த அருவருப்பான செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளேன்.

Advertisment

பொதுவாழ்வில் சமூகப் பணிகளில் ஈடுபடும் பெண்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் போக்கு வளர்ந்து வருவது தடுக்கப்பட வேண்டும்எனத் தெரிவித்தார்.

social media thol.thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe