Advertisment

கை கால்களை கட்டி ஐ.டி பெண் ஊழியர் எரித்துக் கொலை; பிறந்தநாளிலேயே நிகழ்ந்த கொடூரம்

Female IT worker tied hands and feet and burnt  The atrocity that happened on his birthday

செங்கல்பட்டில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்துள்ள பகுதி பொன்மார். அங்குள்ள வேதகிரி நகரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisment

பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் மதுரையைசேர்ந்தவர் என்பது தெரிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணகி நகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கியி ருந்த பெண் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

காதல் விவகாரத்தில் பெண் இறந்திருக்கலாம் என என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்திருக்கும் நிலையில் வெற்றி என்ற நபரை முதற்கட்டமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மிகவும் கொடூரமானது இன்று அப்பெண்ணுக்கு பிறந்தநாள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறந்தநாள் அன்றே இளம்பெண் கொடூரமான முறையில் கை கால்கள் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chengalpattu incident Investigation police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe