Female guard  fights before Elbin company

Advertisment

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எல்பின் நிதி நிறுவனம், தொடர்ந்து பலரை ஏமாற்றி பண மோசடி செய்துவருவதாக பொருளாதார குற்றப்பிரிவில் நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் குவிந்துள்ளன. அந்நிறுவனம், முதலீடு செய்யும் ஒவ்வொருவருக்கும் இரண்டு மடங்காக பணத்தைத் திருப்பித் தருவதாக கொடுத்த விளம்பரத்தை நம்பி பலர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், தற்போது பொதுமக்கள் முதலீடு செய்த பலகோடி ரூபாய் பணத்தைத் திருப்பித் தராமல் எல்பின் நிறுவனம் ஏமாற்றியுள்ளதாகவும் பணத்தை திருப்பித் தராமல் அலைக்கழிப்பதாகவும், பலருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும்வந்த புகார்களால் இப்பிரச்சினை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது சிவகாசியைச் சேர்ந்த பெண் காவலர் ஜெயலட்சுமி எல்பின் நிறுவனத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். எல்பின் நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய்வரை முதலீடு செய்து இதுவரை பணத்தைத் திருப்பித் தராமல் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பணத்தைத் திருப்பித் தரும்வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயலட்சுமியிடம் கண்டோன்மென்ட் காவல்துறையினர் பலமணி நேரம் போராடி, பேச்சுவார்த்தை நடத்தி, “பணத்தைப் பெற்றுத்தர புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறி அனுப்பிவைத்துள்ளனர்.