Advertisment

ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; மானாமதுரையில் பரபரப்பு

nn

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்ஆண் நண்பருடன்பேசிக்கொண்டிருந்த பெண் 5 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மானாமதுரையில் காட்டுப்பகுதி ஒன்றில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை அந்த பகுதியில் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. ஆண் நண்பரை கொடூரமாகத் தாக்கிவிட்டு பெண்ணை காட்டு பகுதிக்குதூக்கிச் சென்ற ஐந்து பேரும் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆண் நண்பர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தசம்பவத்தில் ராமசாமி, முத்துக்குமார், அஜய்குமார், வில்வகுமார், தவமுனியசாமி ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிய முத்துக்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரையில் நடந்த இந்த கூட்டுப் பாலியல் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

sivakangai police manamadurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe