Advertisment

அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் விவசாயி உயிரிழப்பு!     

Female farmer passed away after being trapped in harvester

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி உமா(34). இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். பெருமாள் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கு சம்பாதித்து வருகிறார். கணவர் இல்லாத காரணத்தினால் உமா, அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

Advertisment

சமீபத்திய மழையின் காரணமாக நெல் விவசாயம் செய்துள்ளார். விளைந்த நெல்லை அறுவடை செய்வதற்காக நெல் அறுவடை இயந்திரம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி உள்ளார். நேற்று முன் தினம் அவரது நெல்வயலில் அந்த அறுவடை இயந்திரம் நெல்லை அறுவடை செய்து கொண்டிருந்தது. உமா அந்த இயந்திரத்தின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உமாவின் சேலை முந்தானை நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கியுள்ளது. அறுவடை இயந்திரத்தை நிறுத்துவதற்குள் அந்த இயந்திரத்தில் உமாவும் சிக்கிக்கொண்டார். அதில் அடிபட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உமா உயிரிழந்துள்ளார்.

Advertisment

இதைக்கண்ட அக்கம் பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். இதுகுறித்த தகவலை உடனடியாக மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மங்கலம்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe