A female executive who took down the flag that said 'No respect for women in the tvk'

Advertisment

தவெக கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி அரியலூரில் மகளிர் அணி நிர்வாகிகள் தாங்கள் ஏற்றி வைத்த கொடியை தாங்களே இறக்கி வைத்துவிட்டு கட்சி நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சி சார்பாக மாநிலங்களில் பல இடங்களிலும் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் த.பழூர் ஒன்றியம் சார்பாக மகளிர் அணி நிர்வாகி பிரியதர்ஷினி என்பவர் தன்னுடைய சொந்த செலவில் கொடி மற்றும் கம்பம் ஆகியவற்றை தயார் செய்து கொடியேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தவெக கட்சியின் மற்ற நிர்வாகிகள் தாங்களே எல்லாம் செய்ததுபோல காண்பித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, பெண்களுக்கு மரியாதை இல்லை என பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரியதர்ஷினி, ''ஒன்றிய மகளிர் அணி நிர்வாகியாக இருக்கிறேன். நாங்கள் நேற்று கொடியேற்றினோம். அதேபோல எல்லா ஊருக்கும், எல்லா இடத்துக்கும் சென்றுசெயல்பட்டு இருக்கிறேன். விஜய் விக்கிரவாண்டியில் கொடியேற்றியதில் இருந்து எல்லா இடத்திற்கும் போயிருக்கிறேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். எங்க ஊரில் கொடியேற்றுவதற்காக கஷ்டப்பட்டு தான் செலவு செய்து கொடிக்கம்பம் அமைத்தேன். ஆனால் அப்படி செய்தும் எனக்கு மரியாதையே தரவில்லை. விஜய் பெண்களுக்கு மரியாதை தர வேண்டும் என சொல்லியிருக்கிறார். ஆனால் வந்தவர்கள் அவர்களே செய்த மாதிரி காண்பித்துக் கொள்கிறார்கள். எனக்குள்ள மரியாதை ஒன்றுமே செய்யவில்லை. என்னை வெளியில் காமிக்கவே இல்லை. மகளிர்க்கு முக்கியத்துவம் முக்கியத்துவம் என விஜய் பேசுகிறார். ஆனால் அவருக்காக செயல்படுபவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் செய்வதை போல் தான் காண்பித்துக் கொள்கிறார்கள்'' என தெரிவித்தார்.