Advertisment

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்றுபணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள்இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

Advertisment

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர். சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில்யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத்திருட முயன்றார்.

Advertisment

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்ததுடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பானசி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cctv thief Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe