Skip to main content

வீட்டில் அடைத்து வைத்து பெண் மருத்துவர் சித்ரவதை... போலீசார் விசாரணை!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

Female doctor tortured in custody ... Police investigation!

 

அரசு பெண் மருத்துவரை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக பெண் மருத்துவரின் கணவர் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் மௌலியா-சந்தோஷ்குமார் தம்பதியினர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருந்த நிலையில், மௌலியாவுக்கு சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் மருத்துவராகப் பணி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சந்தோஷ் குமரனுக்கு அரசு மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார் சந்தோஷ்குமார். மேலும் தனது மனைவியான மௌலியாவை அரசுப் பணிக்குச் செல்ல கூடாது என வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.  கணவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பன் கணேஷ் என்பவர் மீதும் கணவர் மீதும் சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மௌலியா கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ் மீதும், அவரது நண்பர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்