female doctor lost their life because she didn't like the groom

தர்மபுரி மாவட்டம் ஹரிகரநாத கோயில் தெருவை சேர்ந்தவர் மருத்துவர் மோனிகா(27). இவர் தனியார் மருத்துவமனை ஒன்றியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் பணிக்கு வந்த மருத்துவர் மோனிகா நள்ளிரவு நேரத்தில் தனி அறையில் தூங்கியுள்ளார். அடுத்த நாள் காலையில் மருத்துவமனைக்கு நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அப்போது நோயாளிகள் தொடர் வருகையையடுத்து மருத்துவமனை செவிலியர் மோனிகாவின் அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த செவிலியர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது மருத்துவர் மோனிகா நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும் ஊசியை தனது கையில் செலுத்தியவாறு மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக கதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று மருத்துவர் மோனிகாவை மீட்டு அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால், மோனிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோனிகாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மருத்துவர் மோனிகாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளார். பெற்றோர் பார்த்த மாப்பிளை தனக்கு பிடிக்கவில்லை என்று தனது தோழியிடம் கூறியிருக்கிறாராம். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் மோனிகா கையில் ஊசியை எழுதிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்திருக்கிறது.