Advertisment

சூட்கேஸில் பெண் சடலம்; சிக்கிய தந்தை, மகள்!

Female corpse in suitcase; Trapped father and daughter!

Advertisment

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் பெண் சடலம். ஆந்திராவில் கொலை செய்து சூட்கேசில் அடைத்து கொண்டு வந்து சடலத்தை விட்டு செல்ல முயன்ற தந்தை, மகளை கைது செய்து ரயில்வே போலீஸ் விசாரணை செய்தனர்.

நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலில் திங்கள் இரவு மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தபோது அதிலிருந்து இறங்கிய தந்தை, மகள் இருவரும் சூட்கேஸ் ஒன்றை ரயில் நிலைய பிளாட்பார்மில் இறக்கி வைத்து விட்டு வேகமாக செல்ல முற்பட்டனர். கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக அவர்களை சென்று மடக்கி பிடித்து சூட்கேஸ் அருகே வந்து பார்த்தபோது அதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சுப்பிரமணி (43), அவரது மகள் (17) என்பதும், சுப்பிரமணி அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் வர மறுத்து அவரை தலையில் அடித்து கொலை செய்ததால் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த ரயில் ஏறி மீஞ்சூர் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

Advertisment

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் அளித்த தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கை, கால்களை மடக்கி தலையை மடித்து 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சூட்கேசில் கிடந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தந்தை, மகள் இருவரிடமும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சூட்கேசில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

minjur police incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe