Advertisment

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்குள் தள்ளிய சக மாணவி!

fellow student pushed college students into issues

Advertisment

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும்அங்கு அதிக அளவு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பெரியமேடு போலீஸ் நிலையத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்றபோது அங்குஜெயப்பிரதா என்கிற ஒரு பெண் இருந்துள்ளார். அந்த பெண்ணை விசாரித்தபோது அவர் சென்னையின் பிரபலமான கல்லூரி ஒன்றில் எஞ்சினியரிங் படித்து வரும் மாணவி என்கிற அதிர்ச்சிகரமான விஷயம் தெரிய வந்திருக்கிறது.

அந்த மாணவியை தீவிரமாக விசாரித்ததில், முதலில் காதலரை சந்திக்க வந்ததாக கூறிய அந்த பெண் பின்னர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரின் செல்போனை வாங்கி பண பரிவர்த்தனை செயலிகளின் கணக்கை ஆய்வு செய்தபோது பல லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுபற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 12-ம் வகுப்பு படிக்கும்போதே சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான பிரகாஷ் என்பவரை ஜெயப்பிரதா காதலித்து வந்துள்ளார். ஜெயப்பிரதாவை காதலித்த பிரகாஷ் பாலியல் தரகராக வேலை செய்து வந்துள்ளார். எனவே தனது தொழிலுக்கு ஜெயப்பிரதாவையும் பயன்படுத்திக் கொள்ள திட்டம் போட்டிருக்கிறார் பாலியல் தரகரான பிரகாஷ். அந்த திட்டத்தின்படி பாலியல் தொழிலில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று பிரகாஷ் கூறியதை நம்பிய ஜெயப்பிரதா பிரகாஷின் யோசனையை நம்பி சென்னையில் பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்படி கல்லூரியில் சேர்ந்த ஜெயப்பிரதாவுக்கு பிரகாஷ் கல்லூரி கட்டணம் போன்றவற்றை கட்டி வந்துள்ளார்.

கல்லூரியில் பிரகாஷின் யோசனைப்படி கல்லூரி மாணவிகளிடம் நட்பாக பழகியுள்ள ஜெயப்பிரதா பின்னர் அவர்களின் பணத் தேவையை அறிந்து கடன் கொடுத்தும் தேவைப்படும்போது காசு கொடுத்ததும் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் இதே மாதிரி அதிகம் சம்பாதிக்கலாம் என்று தன் சக மாணவிகளை மூளைச் சலவை செய்துள்ளார். பின்னர் அதற்கு உடன்படும் கல்லூரி மாணவிகளை வைத்து தனியார் விடுதிகள் சென்னைக்கு வெளியே உள்ள கெஸ்ட் ஹவுஸ்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஜெயப்பிரதாவும் பிரகாஷும் ஈடுபடுத்தியுள்ளனர்.

Advertisment

மேலும், கல்லூரி பெண்களை தொழிலதிபர்களுக்கு அனுப்பி 50 ஆயிரம் முதல் பல லட்சங்கள் பணத்தை இந்த ஜோடி வாங்கிக் கொண்டு அதில் சொற்ப பணத்தை மட்டுமே அந்த பெண்களுக்கு கொடுத்து மோசடி செய்து வந்ததும் விசாரணையில்தெரிய வந்திருக்கிறது. பிரகாஷ் மற்றும் ஜெயப்பிரதாவின் இந்த சதி வலையில் சிக்கி பல இளம் கல்லூரிப் பெண்கள் ஏமாந்திருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜெயப்பிரதாவையும் பிரகாஷின் கூட்டாளி பிரேம் தாஸ் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் தங்களது விஷயம் வெளியானதும் தலைமறைவாகி விட்ட ஜெயப்பிரதாவின் காதலரும் இந்த கும்பலின் தலைவனுமான பிரகாஷை தனிப்படை அமைத்து தேடி வருகிறது சென்னை மாநகர காவல்துறை. மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி அவர்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளிய படு பாதக செயல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Women arrested police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe