'A fellow schoolboy who spilled water was cut with a sickle'-another tragic incident

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டமோதலில்அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை, நாங்குநேரி விஜய நாராயணம் கடற்படை தள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஒரு மாணவர் மற்றொரு மாணவனை சிறிய அளவிலான அரிவாளால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மூலக்கரைபட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னுடைய பாட்டில் தண்ணீரைஉடன் படிக்கும் நாங்குநேரியை சேர்ந்த மாணவன் மீது ஊற்றியதாகவும் இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாணவர்கள் இருவரும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்த நாள் காலை மாணவன் சிறிய அளவிலான அரிவாள் ஒன்றை புத்தகப் பையில் வைத்து எடுத்து வந்த நாங்குநேரியை சேர்ந்த மாணவன் தன் மீது தண்ணீரை சிந்திய சக மாணவனை தலையில் வெட்டியுள்ளான். இதில் காயமடைந்த மாணவன் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நாங்குநேரியைசேர்ந்த மாணவர்கள் அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.