
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இது குறித்து தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ''வணக்கம் நல்லா இருக்கீங்களா.. மாதந்தோறும் ஒரு கோடியே 18 லட்சம் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுகிறார்கள். தாய் வீட்டு சீர் மாதிரி எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திர சீர் என தமிழ் சகோதரிகள் மன மலரச் சொல்கிறார்களே. அது தான் விடியலின் ஆட்சி.
ஆட்சி பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்தை 'மகளிருக்கான கட்டணம் எல்லாம் விடியல் பயணம்' தொடர்பான கையெழுத்து தான். இந்த விடியல் பயணத்தால் பெண்களின் சேமிப்பு அதிகரித்து இருக்கிறது. அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில் மாற்றி உயர் கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் 'புதுமைப் பெண் திட்டம்'. தமிழ்நாடு மாணவ மாணவிகள் என்னை 'அப்பா... அப்பா...' என வாய் நிறைய அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். அந்த பாச உணர்வுதான் முக்கியம். அன்பு சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தின வாழ்த்துகள்!#WomensDay2025 #IWD2025 pic.twitter.com/AoUt4S7fFq
— M.K.Stalin (@mkstalin) March 8, 2025