Skip to main content

அம்மா உணவகத்தில் இன்றுமுதல் மீண்டும் உணவுக்கு கட்டணம்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

ஹo

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்த காரணத்தால் கடந்த சில நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயிருந்தது. குறிப்பாக, சென்னையில் சில சாலைகள் முழுவதும் பழுதடைந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. பல இடங்களில் நீரில் மிதந்தபடி வந்து நிவாரணப் பொருட்களைப் பொதுமக்கள் வாங்கிய சம்பவங்களும் நடைபெற்றன. 

 

இதன் காரணமாக கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்பட்டது. ஞாயிறு வரை இலவச உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணயாளார் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்த நிலையில், இன்று (15.11.2021) காலைமுதல் அம்மா உணவகத்தில் மீண்டும் உணவுக்கு கட்டணம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த கனமழையின் காரணமாக இதுவரை 8 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லா கட்டும் பூரி, வடை, ஆம்லெட் விற்பனை...? புகாரில் சிக்கிய அம்மா உணவகம்!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

Puri, vada, Omelette Sale ...? Amma restaurant caught up in the complaint!

 

அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத பூரி, வடை, ஆம்லெட் போன்ற உணவுகளைத் தயாரித்து சிலர் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

 

மதுரையில் உள்ள 10 அம்மா உணவகங்களில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி, 5 ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் என லிஸ்டில் இல்லாத உணவுகளை தயாரித்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மதிய வேளைகளில் அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து ரசம், ஆம்லேட் என விற்பனை செய்யப்படுகிறதாம்.  

 

ரசம், ஆம்லேட்க்கு தனியாகப் பணம் பெற்றுக் கொள்ளப்படுகிறது. சில கவுன்சிலர்கள் ஊழியர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அம்மா உணவகத்திற்கு வரும் கேஸ் மற்றும் உணவு தயாரிக்க வரும் பொருட்களை வைத்து இப்படி லிஸ்டில் இல்லாத பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் ஆகியவற்றை தயாரித்து விற்பதாக கூறப்படுகிறது. இந்த உணவுகளை தயாரிக்க ரேஷன் கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு, உளுந்து, ரவா உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கேட்டால் அதுபோன்று எதுவும் இல்லை. சிலர் அரசியல் உள்நோக்கத்திற்காக இப்படி புகார் தெரிவிக்கின்றனர் எனக் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.

 

 

Next Story

ஞாயிறு வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு!

Published on 12/11/2021 | Edited on 13/11/2021

 

பர

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை கடந்த சில நாட்களாக முடங்கி போனது. குறிப்பாக சென்னையில் சில சாலைகள் முழுவதும் பழுதடைந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

 

இதுதொடர்பாக பேசிய அவர், "  ஒவ்வொரு மண்டலங்களிலும் 100 பழுதடைந்த சாலைகளை கண்டறிந்து சரி செய்ய திட்டம் நாளை முதல் தொடங்கும். ஒருசில நாட்களில் அனைத்து சாலைகளும் சீர் செய்யப்படும். மேலும், அம்மா உணவகங்களில் ஞாயிறு வரை இலவச உணவு இரவு 10 மணி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மழை நீர் தேங்கி இருந்த 22 சுரங்கப் பாதைகளில் 18 சுரங்கப் பாதைகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. நாளை 2 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்" என்றார்.