Advertisment

நடிகர் விவேக் மரணம் தொடர்பாக மத்திய வல்லுநர் குழு அறிக்கை!

Federal panel of experts report About actor Vivek's

நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்குகரோனாதடுப்பூசி காரணமல்லஎன மத்திய வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisment

கரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்டஇரண்டுநாட்களுக்குப்பிறகு நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலிகாரணமாகசென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோசிகிச்சைஅளிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

Advertisment

இந்த சம்பவத்தில்கரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்டஇரண்டு நாட்களில் நடிகர் விவேக் உயிரிழந்தது பேசுபொருளானது.கரோனாதடுப்பூசி பாதுகாப்பற்றது என்ற அச்சமும்நிலவியது. அதனையடுத்து தடுப்பூசியால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, இது தொடர்பாக ஆய்வு செய்தது. விவேக்கின் உயிரிழப்புக்கு ஏப்ரல் 15ஆம் தேதி அவர் செலுத்திக்கொண்டகோவாக்சின்காரணமில்லைஎன மத்திய ஆய்வுக் குழு தற்போது வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை மத்திய அரசு மீண்டும் உறுதிசெய்துள்ளது.

Central Government vivek
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe