



Published on 01/02/2021 | Edited on 01/02/2021
மத்திய பட்ஜெட்டை கண்டித்து, சென்னை வருமானவரித்துறை அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் (தமிழ்நாடு) சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர், பட்ஜெட் தாக்கல் செய்யும் இன்று, 11% பஞ்சப் படி நிறுத்தம், புதிய ஓய்வுதியத் திட்டம், ரயில்வே, வங்கிகள், தபால் துறை சேவைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதல், அரசு ஊழியர் வேலையிழப்பு, உட்பட அரசு ஊழியர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.