தமிழகத்தில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல், மறுபரிசீலனை ஆகியவை முடிந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில், வாக்குப்பதிவு நடைபெறும் தேதியான பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நாள் அன்று விடுமுறை என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள கடம்பூர் பேரூராட்சிக்கு இந்த பொது விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.