publive-image

Advertisment

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி அன்று புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி அன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லாத நாளாகக் கடைப்பிடிக்கப்படும். புத்தகப்பை இல்லாத நாளன்று மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு ரூபாய் 1.2 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நாளில் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்விக் குறித்து பயிற்றுவிக்கப்படும். அதேபோல், மாடித் தோட்டம் அமைப்பது, மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.