Advertisment

பில்லி சூனிய பயம்; பிரபல நடிகர் காவல்துறையில் பரபரப்பு புகார்

fear of witchcraft; A famous actor filed a complaint with the police

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் சதீஷ்குமார். இவர் சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

அதில், 'கடந்த ஆண்டு கலாசேத்ரா காலனியில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலுக்கு சென்றபோது பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க வேண்டுமென தன்னிடம் கேட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அதன் பிறகு யார் மூலமாகவோ என்னுடைய தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டு போன் செய்து தொந்தரவு செய்தார். தொடர்ந்து நான் பெண்ணின் செல்போன் நம்பரை பிளாக் செய்த நிலையில் ஒரு கட்டத்தில் வீட்டையே கண்டுபிடித்து வந்து மிரட்டியதோடு பில்லி சூனியம் வைத்து விடுவேன் என மிரட்டினார்' என இந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சதீஷ்குமார்கொடுத்த புகாரின் அடிப்படையில்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
mysterious serial police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe