'The fear of the Islamic people is justified' - Edappadi Palaniswami

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்பு வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்காக 1954ஆம் ஆண்டுவக்ஃபு சட்டம் கொண்டுவரப்பட்டு, 1958ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அன்று முதல் வக்ஃபு சட்ட விதிகளின்படி, வக்ஃபு வாரிய சொத்துக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.

Advertisment

அந்த மசோதாவில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோர்வக்ஃபு வாரியத்தில் இடம் பெற செய்வது,வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. அப்போது இந்த மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் நாடாளுமன்ற வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 16 பேரும், எதிராக 11 பேரும் வாக்குகளைச் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிறுபான்மை மக்களுக்கு எதிராக வக்ஃபு சட்ட மசோதா சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானது தான். நாடாளுமன்ற கூட்டுக்குழு பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளை நிராகரிக்க அவசர அவசரமாக மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவேவக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.