Skip to main content

அதிமுக வேட்பாளரின் தோல்வி பயம், மண்டபத்திற்கு சீல்- ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

வேலூர் மக்களவை திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக ஆம்பூர் வருகை தந்த மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி மீது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த எதிர்ப்பு அலை இப்போதும், அதே நிலையில் தான் உள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் இரண்டு மாதங்களாக நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி வருகிறார். 
 

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து சொல்வதற்கு குறுகிய காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மை மட்டும் இல்லாமல் ஏழை எளிய மக்களின் கல்வியை பறிக்கும் வகையிலும், கல்வியை ஒரு வியாபாரமாக மாற்றக்கூடிய வகையில் இந்த புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

 

 Fear of failure of AIADMK candidate, seal the hall Interview with manitha neya makkal katchileader Jawahirullah!



 

முத்தலாக் சட்டத்தை கடந்த முறை மோடி பிரதமராக இருந்த போது நாடாளுமன்றத்திலே மூன்று முறை அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. இப்போது அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முத்தலாக் சட்டத்தை சட்டவிரோதம் என்று கூறியதே தவிர, தலாக் சொல்லக்கூடிய கணவன்மார்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசும் போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நாடு முழுவதும் 463 முத்தலாக் வழக்குகள் பதிவாகியுள்ளதாக என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.  கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசு மக்கள் நலனுக்கும் தமிழ் நாட்டின் நலனுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது.
 

தேர்தல் விதி மீறல் என்றால் மண்டபத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டுமே தவிர மண்டபத்திற்கு சீல் வைத்த வரலாறு தமிழ்நாட்டிலேயே இப்போது தான் நடந்துள்ளது. அதிமுக வேட்பாளரின் தோல்வி பயத்தால் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 Fear of failure of AIADMK candidate, seal the hall Interview with manitha neya makkal katchileader Jawahirullah!


 

முத்தவல்லிகளுடன் ஆலோசனைக்காக அந்த மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வழியாக வந்த திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளே வந்துள்ளனர். வாக்கு சேகரிப்பதற்காக பல்வேறு சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியவரை நேரில் சந்திக்கின்றோம் அதையெல்லாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என கருத முடியும்மா? ஒரு தேநீர் கடைக்குச் சென்று ஒரு தேனீர் அருந்திவிட்டு அங்குள்ள மக்களிடம் வாக்கு கேட்டால் அந்த தேனீர் கடைக்கு சீல் வைத்து விடுவார்களா? சீல் வைத்தது ஒரு அராஜக நடவடிக்கை இதை சட்டரீதியாக அவர்கள் எதிர் கொள்வார்கள்.
 

லோக்சபாவில் திமுக உறுப்பினர்கள் என்.ஐ.ஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் அதற்கு முன்பாக திமுக உறுப்பினர் ராசா இந்த சட்டத்தை எதிர்த்து பேசினார். அதற்கு பின்னர் அவர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். அனைத்து அரசியல் கூட்டமைப்பின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின், அறிவாலயத்தில் சந்தித்து என்.ஐ.ஏ சட்டத்திற்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளோம்.  அந்த சட்டம் எப்படி எல்லாம் முஸ்லீம் இளைஞர்கள் மீது ஏவுவார்கள் என்பது குறித்து அவரிடம் விவரித்தோம், அதன் பிறகு அவர் பாஜக அரசு அரசியல் ஆதாயத்துக்காக என்.ஐ.ஏ சட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்வதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். என்று ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.