Advertisment

பிக் பாஸ் போட்டியாளர்களை திட்டிய பாத்திமா பாபு!

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-3 நேற்றிலிருந்து ஆரம்பமானது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய புதிய விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது தண்ணீர் பிரச்னை இருப்பதால் பிக் பாஸ் வீட்டிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கூறியிருக்கிறார்கள்.

Advertisment

bigboss

இந்த நிலையில் இன்று ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது அதில் சமையல் பண்ணும் போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான அளவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று பிக் பாஸ் கூறும் போது அங்கு இருக்கும் போட்டியாளர்கள் அதை கை தட்டி வரவேற்று சந்தோசமாக இருந்தனர். அதற்கு பாத்திமா பாபு அனைத்து போட்டியாளர்களையும் கடிந்து கொண்டு, இது சந்தோசமான விஷயம் அல்ல, இதற்காக நாம் வருத்தப்பட வேண்டும் என்று கோபமாக கூறியுள்ளார்.

Advertisment
contest fathima television kamalhaasan bigboss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe