வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கு திருமணம் ஆகி பிந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 6 வயதில் தயாநிதி, இரண்டரை வயதான ஹரிபிரசாத் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணகுமார் அதே பகுதியில் சர்தார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 6 மாதமாக கூலிவேலை செய்து வருகிறார்.

Advertisment

death

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இன்று மார்ச் 13 ந்தேதி விவசாய நிலத்தில் உள்ள தென்னமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது மகன் ஹரிபிரசாத் விவசாய கிணற்றின் அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராது வகையில் குழந்தை ஹரிபிரசாத் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

Advertisment

நீண்ட நேரமாக குழந்தையின் சத்தம் வராததால் அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் இங்கும் அங்கும் தேடி இறுதியாக தண்ணீர் தொட்டியில் பார்த்த போது குழந்தை நீரில் முழுகி, மயங்கி நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குழந்தையை தொட்டியில் இருந்து தூக்கிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது, பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

death

இந்த தகவல் ஆம்பூர் நகர போலீசார்க்கு தெரிவிக்கப்பட்டது. போலிஸார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் பிரேதத்தை கைபற்றினர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.