Advertisment

காதல் திருமணம் - மகளை, மருமகனை கொலை செய்ய முயன்ற தந்தை சரண் 

Father who tried to kill

வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த ஆத்திரத்தில் மகளையும், மகளின் கணவரையும் வெட்டிய தந்தை ஐதராபாத் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

Advertisment

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் எர்ரகட்டா பகுதியைச் சேர்ந்தவர் மாதவி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்பவரை கல்லூரியில் படித்தபோது காதலித்துள்ளார். இவர்களது காதலுக்கு மாதவி வீட்டில் எதிர்ப்பு வந்துள்ளது. சந்தீப் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாதவி சந்தீப்பை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் எர்ரகட்டாவில் உள்ள போர கொண்டா என்ற இடத்தில் மாதவியும், சந்தீப்பும் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த மாதவியின் தந்தை மோகனாச்சாரி கத்தியால் சந்தீப்பை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த மாதவிக்கும் கத்தி குத்து விழுந்தது.

சம்பவம் நடந்தவுடன் மோகனாச்சாரி அந்த இடத்தில் இருந்து தப்பினார். சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தன் பேரில் எஸ்.ஆர்.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாதவியையும், சந்தீப்பையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மோகனாச்சாரி ஐதராபாத் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

father Kill love marriage police Surrender tried
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe