ADVERTISEMENT

கையேந்த வைத்த கஜாவால் பெற்ற மகனை 10,000 ரூபாய்க்கு விற்ற தந்தை!!

09:37 PM Dec 28, 2018 | kalaimohan

ADVERTISEMENT

அண்மையில் தாக்கிய கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்கள் பெரும்சேதத்தையும், அழிவையும் சந்தித்தது மக்களை அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலைக்குத் தள்ளியது. இந்த புயல் தாக்குதல்களிலிருந்து மக்கள் மீண்டெழுந்து வரும் செய்திகள் தொடர்ந்து நம் காதை எட்டினாலும் ஒரு சில சம்பவங்கள், ஒரு சில நிகழ்வுகள் கேட்போருக்கு பெரும் சோகத்தையும் மீளமுடியாத துயரத்தையும் ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. அப்படி ஒரு சம்பவம்தான் பட்டுக்கோட்டையில் நடந்துள்ளது.

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் விவசாயி ஒருவர் புயலால் ஏற்பட்ட தாக்கத்தினால் வேலையற்ற நிலையில் பெற்ற மகனையே பத்தாயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் நடந்துள்ளது.

பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான மாரிமுத்து அவரது மனைவி வசந்தா. இந்த தம்பதியினர் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடிழந்த நிலையில் தங்களது நான்காவது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு ஆடு மேய்க்க கொத்தடிமையாக விற்று விட்டனர்.

புயல் பாதிப்பை அதிகாரிகளிடம் முறையிட்டும் உதவி செய்ய முன்வராததால் பெற்ற மகனை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டதாக அந்த விவசாய குடும்பத்தினர் கண்ணீருடன் கூறுகின்றனர்.

நாகப்பட்டினத்தை அடுத்த பனங்குடி என்ற இடத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு கொத்தடிமையாக தனது மகனை சேர்த்ததாக தந்தையான மாரிமுத்தே கூறியது கண்ணீரை வரவழைத்தது. அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவன் நாகை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பரிந்துரையின் பேரில் தஞ்சையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சிறுவனை கொத்தடிமையாக வாங்கிய சந்துரு என்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT