/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_268.jpg)
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நவாப்புரா பகுதியில் வசித்து வருபவர் தத்தாத்ரேயா ஷெண்டெ. இவருக்கு பிரணவ், குஷால் என்ற இரு மகன்கள் உள்ளன. இந்த நிலையில் சம்பவத்தன்று, தனது காலில் மசாஜ் செய்யும் படி குஷால், தந்தை தத்தாத்ரேயா ஷெண்டேவிடம் கூறியிருக்கிறார். ஆனால் மசாஜ் செய்ய தத்தாத்ரேயா ஷெண்டே மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரடமைந்த குஷால், தனது தந்தை தத்தாத்ரேயா ஷெண்டேவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதனை அவரது சகோதரர் பிரணவ் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரையும் குஷால் தாக்க முயன்றதால், பயந்துபோன பிரணவ் அருகே உள்ள வீட்டார்களின் உதவியைக் கேட்ட வெளியேச் சென்றுள்ளார். பின்னர் அவர்களை அழைத்து வந்து பார்த்தபோது, தத்தாத்ரேயா ஷெண்டே தரையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்துப் பதறிப்போன அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தத்தாத்ரேயா ஷெண்டேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து,குஷாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)