2019 ஜனவரி மாதம் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 மாத ஆண் குழந்தை தனக்கு பிறந்தது இல்லை என தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை கார்த்திகேயன் என்பவன் கொலை செய்தான். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவன்கார்த்திகேயன் (30). அவனை குடும்பத்தார், ஊர்பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அவன் சிறையில் இருந்த காலகட்டத்தில், அவனது மனைவி ராஜேஸ்வரி, தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 90 நாள் சிறையில் இருந்தவன், சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்துள்ளான். தனது வீட்டுக்கு வந்து தங்கியிருந்தவன், தனது தந்தையிடம் அடிக்கடி சண்டையிட்டுள்ளான்.
இந்நிலையில் ஏப்ரல் 23ந் தேதி விடியற்காலை வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டு இருந்த தனது தந்தை தனபாலை, கோடாரி கொண்டு கழுத்திலேயே வெட்டி கொலை செய்துள்ளான். கொலை செய்துவிட்டு நேராக வானாபுரம் காவல் நிலையம் சென்று சரணடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
காவல்துறையில், தான் முன்பு கொலை செய்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை. என் அப்பனுக்கும் – மனைவிக்கும் பிறந்தது. அந்த ஆத்திரத்தில்தான் குழந்தையை கொலை செய்தேன். தப்பு செய்த என் அப்பன் நிம்மதியாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு கோபம் வந்தது. அதனால் தான் அந்தாளை கொலை செய்தேன் எனக்கூறியதாக கூறப்படுகிறது.
தனபால் உடலை உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். கார்த்திகேயன் மீது தந்தையை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் ஏப்ரல் 24ந் தேதி அடைத்தனர்.