Advertisment

மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை - பரிதாப சம்பவம்

murder

Advertisment

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளது பரிதாப சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.

கோவை தெப்பக்குளம் அருகே உள்ள லிங்கப்பட்ட செட்டி வீதியில் வசித்து வருபவர், முத்து. 70 வயதான இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வேலம்மாள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததை அடுத்து, மகன் கணேஷன் மற்றும் மகள் ராதாவுடன் வசித்து வந்துள்ளார்.

இவரது 40 வயதான மகன் கணேஷன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் 20 வருடங்களாக வீட்டிலேயே வைத்து பராமரித்து வந்துள்ளனர்.

Advertisment

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவ்வப்போது ஆக்ரோசமாக நடந்துகொள்ளும் கணேஷனை பாரமரிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். அது போன்ற சமயமங்களில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களாக கணேஷன் , ஆக்ரோசமாக இருந்தாகவும், அப்போது அவரது தந்தையை தாக்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கணேஷன் மீண்டும் ஆக்ரோசமாக நடந்து கொண்டுள்ளதாகவும், இவரை கட்டுப்படுத்த முடியாத இவரது வயதான தந்தை ,மயக்க மாத்திரைகளை கணேஷனுக்கு கொடுத்து வீட்டில் இந்த அம்மிக்கல்லை கணேஷனின் தலையில் போட்டு கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய முத்துவின் மகள் ராதா, தனது சகோதரனை தந்தை கொலை செய்ய சம்வத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் காவல்துதையினர் கணேஷனின் உடல் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக முத்துவை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தனது வயது முதிர்ச்சி காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாமல் தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

father killed son
இதையும் படியுங்கள்
Subscribe