Father slashes son with after he got into argument after drinking

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூராபாளையம் - ரோடு பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் சரத்குமார் தினந்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதாகவும் இப்படி அடிக்கடி காலை முதல் மாலை வரை குடித்தால் உனக்கு யார் திருமணத்திற்கு பெண் கொடுப்பார்கள் எனவும் தந்தை குலைஞ்சி சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

சரத்குமாரின் குடிப்பழக்கத்தினால் அவரது அடிக்கடி குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் தந்தை கொளஞ்சிக்கும் மகன் சரத்குமாருக்கும் அடிக்கடி வாய் தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று, சரத்குமார் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றதால் அவருக்கும் தந்தை கொளஞ்சிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை கொளஞ்சி மகன் சரத்குமாரை விறகு வெட்டும் கொடுவாளால் சரமாரியாக கழுத்து மற்றும் தலை பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் சரத்குமாருக்கு கழுத்து காது தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த சரத்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் திருச்சிக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சரத்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

சம்பவம் குறித்து சரத்குமாரின் தாய் பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சங்கராபுரம் காவல் துறையினர் தந்தை கொலஞ்சியை தேடி வந்த நிலையில் அவர் பெங்களூரில் கிளாஸ் பாளையம் பூ மார்க்கெட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற சங்கராபுரம் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகன் வேலைக்கு செல்லவில்லை குடித்துவிட்டு தகராறு ஈடுபட்டதாக தந்தை மகனை கொடுவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் சங்கராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment