Father passes away in baby cradle

Advertisment

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கன்(40). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் வெளியே சென்றுள்ளனர். வெளியே சென்றிருந்த அவர் குடும்ப உறுப்பினர்கள், வீடு திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை தூங்கும் தொட்டிலில் கழுத்து இறுகி லிங்கன் உயிரிழந்திருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் குடும்பத்தினர், அரியமங்கலம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்று குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில், லிங்கன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர், மது அருந்திவிட்டு வீட்டில் குழந்தை தூங்குவதற்காக கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த தொட்டிலில் விளையாட்டுத்தனமாகத்தலையை வைத்து ஆடியுள்ளார். இந்நிலையில் தொட்டிலில் துணி கொஞ்சம் கொஞ்சமாக அவரது கழுத்தை இறுக்கி உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் அதிலிருந்து வெளியே வர முடியாமல் தொட்டிலிலேயே கழுத்து இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்என்று கூறப்படுகிறது.