/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2395.jpg)
மன்னார்குடி அருகே தனது தந்தையை இழந்த சோகத்தை மனதில் புதைத்து தனது குடும்ப வறுமையை மனதில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருக்கிறான் ஒரு மாணவர்.
திருவாருர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த கானூர் பருத்திக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். விவசாய தினக்கூலியான ஜெயராஜ் சமீப நாட்களாக உடல்நலன்மின்மையாக இருந்துவந்தார். ஜெயராஜின் மகன் ப்ரித்திகேசன் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்தார். குடும்ப வறுமையை மனதில் கொண்டு தனது குடும்பத்தை நல்லநிலைக்கு கொண்டு வரவேண்டும் என்கிற வைராக்கியத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு இரவுபகல் பாராமல் படித்து தேர்வு எழுதி வருகிறார்.
இந்த சூழலில் மாணவன் ப்ரித்திகேசனின் தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரழந்தார். தந்தை இறந்த சோகத்தை மனதில் புதைத்துக்கொண்டு, குடும்ப நிலையை மாற்ற படிப்பின் முக்கியத்துவம் உணர்ந்துஇன்று மாணவன் தனது பொதுத் தேர்வை எழுதினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)