Father passed away in frustration over son's arrest

திருட்டு வழக்கில் மகன் மற்றும் மருமகள் கைதான விரக்தியில், முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரியலுார் மாவட்டம் மருவத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி. இவரது வீட்டின் ஓட்டைப் பிரித்து, கடந்த 28ஆம் தேதி நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து ராசாத்தி செந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் செந்துறை காவல் நிலைய காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.

Advertisment

இதில், அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி - லட்சுமி தம்பதியை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்களிடம் இருந்த திருடுபோன நகை, பணத்தை மீட்டு அவர்களை சிறையில் அடைத்தனர். இதையறிந்த பழனிசாமியின் தந்தை ரெங்கசாமி (70) கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். தனது இளைய மருமகள் மற்றும் இளைய மகன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ரெங்கசாமி, நேற்று (30.09.2021) காலை அங்குள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment