Advertisment

சென்னையில் கொடூரம்; 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!

father misbehaved with his daughter for 4 years

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 19 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு படித்து வரும் தனது 14 வயதான மகளை காணவில்லை என்று கொளத்தூர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்பு சிறுமி செங்கல்பட்டு பகுதியில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக விரைந்து சென்று சிறுமியை மீட்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதில், சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். கொரானா காலகட்டத்தில் வீட்டில் இருந்த போது அவரது தந்தை பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து 4 ஆண்டுகள் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் கொடுத்துள்ளார்.

Advertisment

இதையடுத்து சிறுமி சமூக வலைதளங்கள் மூலம் சில இளைஞர்களுடன் பழகி வந்துள்ளார். அதில் சிலர் சிறுமியை அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் கொடுத்ததும் தெரியவந்திருக்கிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து போக்ஸோ வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தந்தை, செங்கல்பட்டு ஒத்தவாடை தெருவௌச் சேர்ந்த ரூபன்(24), வேளச்சேரியைச் சேர்ந்த அரவிந்த் குமார்(22) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

POCSO father
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe