மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட தந்தை; குடும்பத்தினர் அதிர்ச்சி!

Father married woman betrothed to son

உத்தரப்பிரதேசம் மாநிலம் பன்சங்கலி கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சகீல்(55). இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் தனது 17 வயது மகனுக்கு சகீல் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து பெண் தேடி வந்துள்ளார். இறுதியாக தனது கிராமத்திற்கு பக்கத்து ஊரில் உள்ள இளம்பெண் ஒருவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப் பேசி முடித்துள்ளார். அதன்பிறகு இருவருக்கும் பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் சகீல் தனது மகனுக்கு நிச்சயம் செய்த இளம்பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். மேலும் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக வீடியோ காலிலும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எதர்சியாக தனது தந்தையின் செல்போனை பார்த்த மகனுக்கு, தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் சகீல் பேசி வந்தது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்சனைகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் யார்ய்ம் எதிர்பாராத விதமாக சகீல், தனது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து சகீலின் மனைவி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனுக்கு நிச்சயம் செய்த இளம்பெண்ணை தந்தையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் இரு குடும்பத்தார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

uttarpradesh young girl
இதையும் படியுங்கள்
Subscribe