Advertisment

மகளின் நிலை கண்டு வேதனை; தந்தை எடுத்த விபரீத முடிவு

Father lost their life agony as his daughter lives separately from her husband

ஈரோடு, பெரியசேமூர், கல்லான்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி(45). கட்டட மேஸ்திரி. இவரது மனைவி வளர்மதி (43). இவர்களது மகள் சவுந்தர்யா. இவரை, வளர்மதியின் தம்பிக்குத்திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சவுந்தர்யா கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால், தந்தை கருப்புசாமி மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமையாகி தினமும் மது குடித்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில்தனது மகளின் நிலை குறித்த விரக்தியில்,மதுபோதையில் கருப்புசாமி புலம்பிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று அதிகாலை வளர்மதி தூங்கி விழித்துப்பார்த்தபோது, கருப்புசாமிசேலையால் தூக்கிட்டுத்தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே கருப்புசாமி இறந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

Erode father mother
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe