Father killed daughter

Advertisment

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருக்கு புனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், 7 வயதில் மகளும் உள்ளனர். மகேஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். புனிதா குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் மகள் படித்து வந்தார்.

கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து வந்த மகேஸ்வரன், தான் வெளிநாட்டில் இருந்தபோது அனுப்பிய பணத்தை கேட்டுள்ளார். அதற்கு புனிதா அந்த பணம் செலவாகி விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி நடத்தை மீது சந்தேகம் அடைந்து அதுதொடர்பாகவும் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

இந்தநிலையில சம்பவத்தன்று கடந்த 15ஆம் தேதி மகேஸ்வரன் தனது மகள் சன்விகாவுக்கு வி‌ஷத்தை கொடுத்து, தானும் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தை, மகளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சன்விகா பரிதாபமாக இறந்தார்.

Advertisment

மகேஸ்வரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.