Father involved in the dispute! police arrested son

திருச்சி அதவத்தூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(46). கட்டிட சென்டரிங் வேலை செய்து வந்த இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பார்த்தசாரதி(19) என்கிற மகன் உள்ளார். குடிப்பழக்கம் உள்ள ரெங்கராஜ் தினமும் குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்வது வழக்கம். இவ்வாறு மனைவி மல்லிகாவிடம் நேற்று தகராறு செய்து கொண்டிருந்த போது வீட்டிற்கு வந்த மகன் பார்த்தசாரதி, ரெங்கராஜை தட்டி கேட்டு உள்ளார். இதில் தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்படவே, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பார்த்தசாரதி தனது தந்தை ரெங்கராஜை சரமாரியாக வெட்டி உள்ளார்.

Advertisment

இதில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டு ரெங்கராஜ் கீழே சரிந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சோமரசம்பேட்டை போலீசார் பார்த்த சாரதியை கைது செய்து உள்ளனர்.

Advertisment