Father incident young man who cheated on his daughter in love

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(27). இவர் தனியார் மருத்துவமனை ஒன்றியில் ஓட்டுநராக இருந்து வந்தார். தமிழ்செல்வன் தனது தாய்யின் சொந்த ஊரான ராஜபாளையம் அருகே உள்ள கொல்லக்கொண்டான் கிராமத்திற்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அப்படிச் செல்லும்போது அந்த ஊரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் தமிழ்செல்வத்திற்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் 3 வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண் தமிழ்ச்செல்வனை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதனை மறுத்துள்ளார். அதே சமயம் வேறு சில பெண்களுடனும் தமிழ்ச்செல்வன் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தமிழ்ச்செல்வனின் காதலிக்கு தெரியவர கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் பெண் வீட்டார் கடும் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த சூழலில் தனது மகளின் இறப்பிற்கு தமிழ்ச்செல்வன் தான் காரணம் என எண்ணிய பெண்ணின் தந்தை மலைக்கனி, அண்ணன் ராஜாராம் ஆகியோர் இருவர் தமிழ்ச்செல்வனைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளனர்.

Advertisment

கொலை செய்வதற்காக பல நாட்களாக காத்திருந்த மலைக்கனிக்கும், ராஜாராமுக்கும் தமிழ்ச்செல்வன் கோவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த தந்தை மற்றும் மகன் இருவரும், ராஜபாளையத்தில் இருந்து கோவைக்கு சென்றுள்ளனர். அங்கு, தாங்கள் மருத்துவமனையில் இருப்பதாக தமிழ்ச்செல்வனிடம் கூறி அவரை தனியாக வரவழைத்துள்ளனர்.

பின்பு ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு தமிழ்ச்செல்வனை அழைத்துச் சென்ற மலைக்கனி மற்றும் ராஜாராம் இருவரும் தமிழ்ச்செல்வனிடம் தகாராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் எனது மகளின் சாவுக்கு நீதான் காரணம் என்று தான் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து தந்தை மகன் இருவரும் தமிழ்ச்செல்வனை சரமாரியாக குத்தியுள்ளனர். பின்னர் ஆத்திரமடங்காத மலைக்கனி தமிழ்ச்செல்வனின் கழுத்தை அறுத்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அந்த வழியாகச் சென்றவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தப்பித்துச் சென்று தலைமறைவாக இருந்த தந்தை மற்றும் மகன் இருவரையும் கைது திருப்பூரில் வைத்து கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.