/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_33.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூர் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (45). இவரது மனைவி வள்ளியம்மாள் (37) மற்றும்பிள்ளைகள் த்ரிஷா (14), மோனிஷா (11), சிவா (6), புஜ்ஜிமா (3), பூமிகா (9).
இன்று விடியற்காலை பழனி தனது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரையும்அரிவாளால் வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்தஅக்கம்பக்கத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
9 வயதான பூமிகா மட்டும் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் இறந்துவிட்டனர்.வெட்டியதாகச் சொல்லப்படும் பழனி அதே வீட்டில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுப்பாளையம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சனை காரணமாக பழனி தனது மனைவி மற்றும் ஐந்துகுழந்தைகளையும்வெட்டியதாகத்தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஒருவரே வெட்டிக் கொலை செய்ததோடு அவரும் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us